Pagetamil
லைவ் ஸ்டைல்

ஆண்கள் வருங்கால மனைவியிடம் எவற்றை எதிர்பார்க்கின்றார்கள் தெரியுமா?

பெண்கள் தங்கள் வருங்கால கணவர்களிடம் பல எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது உண்டு. அதே போன்று ஆண்களும் தங்களது வருங்கால மனைவியிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் எதிர்ப்பார்க்கும் விஷயம் என்ன? அதை தெரிந்துகொள்வோம்.

ஆண் தன்னை சுற்றியுள்ள மக்களிடம் அன்பாக இருக்க கூடிய பெண்ணை விரும்புகிறார். ஒவ்வொரு ஆணும் மென்மையான கனிவான பெண்களை எப்போதுமே நேசிக்கிறார்கள். அது தங்கை, தாய், உறவினர் என்னும் போது அதே போன்று மனைவியையும் அப்படியே விரும்புகிறார்.

மனைவியின் அன்பை முழுமையாக பெற முதல் இரவில் கணவன் எப்படி நடந்துக்கணும் தெரியுமா?

பெண்கள் மோசமான நிலைகளில் ஒரு துணையின் கையை எதிர்நோக்குவது போன்று ஆண்களும் தங்களது சூழ்நிலையில் தங்கள் கையை ஆதரவுடன் பற்றிகொள்ள தனது மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பாசத்தின் மிகுதியில் வெளிப்படும் சிறு முத்தம் போன்ற பாசத்தின் வெளிப்பாடு கொண்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் சுதந்திரமாக வேலை செய்யும் பெண்களை விரும்புகிறார்கள். சிறிய விஷயத்துக்கு கூட முடிவெடுக்காமல் திணறும் பெண்களை காட்டிலும் துணிச்சலுடன் தன்னிச்சையாக இயங்கும் பெண்களை ஆண்கள் மிகவும் விரும்புகிறார்கள். பாராட்டுகிறார்கள்.

பெண்கள் எப்போதும் வீட்டுக்குள் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளும் நிலையில் இருப்பதை தற்போதைய ஆண்கள் விரும்புவதில்லை. பொருளாதாரம், நிதி விஷயங்கள் மற்றும் பிற விஷயங்களில் மனைவியின் கருத்தும் இருக்க விரும்புகிறார்கள். உண்மையில் வருங்கால மனைவி ருசியாக சமைத்தால் மட்டும் போதும் என்னும் மனநிலையில் இருந்து ஆண்கள் எப்போதோ மாறிவிட்டார்கள்.

சங்கடமான நேரத்திலும் சிக்கலான நேரத்திலும் இருக்கும் போது ஆண் தனியாக நிற்க கூடும். இத்தகைய கடினமான சூழலிலும் தன்னை அதிலிருந்து மீட்க ஆதரவான நிலையை தனது வருங்கால மனைவியிடம் விரும்புவான். எல்லா நேரங்களிலும் ஆண்கள் பதட்டமாகவே இருப்பர்கள். அத்தகைய நிலையில் மனைவியின் ஆதரவை பெரிதும் விரும்புவார்கள். பெண்கள் வெட்கம் கொண்டிருப்பது இயற்கையானது. ஆனால் வெட்கம் தாண்டிய அமைதியை கொண்டிருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை. சலிப்பாக இருக்கும் மந்தமாக இருக்கும் பெண்கள் சோர்வாகவே இருப்பார்கள்.

பெண்கள் நகைச்சுவை உணர்வுடன் இருக்க வேண்டும். தன்னோடு உரையாடும் போது நகைச்சுவை உணர்வை கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். பெண் தன் மனதில் இருக்கும் விஷயங்களை தன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆண்கள் விரும்புவார்கள். மனைவியின் உணர்வுகளை மதிக்க அவர்களது உள் உணர்வுகளையும் ஆழ்மனதில் இருக்கும் விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆண்கள் மனைவியிடம் எதையும் மறைக்காமல் மனதில் இருப்பதை வெளிப்படுத்துவது போன்று மனைவியும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.​படுக்கையில் அன்பை வெளிப்படுத்த வேண்டும் ஆண்கள் வருங்கால மனைவியிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயங்களில் முதன்மையானதும் இதுதான். ஆண்கள் திருமணத்தை எதிர்நோக்கும் போது தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட மனைவியின் முழு ஒத்துழைப்பை எதிர்கொள்வார்கள்.

மனைவியின் அன்பை முழுமையாக பெற முதல் இரவில் கணவன் எப்படி நடந்துக்கணும் தெரியுமா?

தாம்பத்தியத்தில் மட்டுமே முழுமையான அன்பை கொடுத்துவிடுவதில்லை. ஆனால் அன்பு கலந்த தாம்பத்தியத்தில் மட்டுமே வாழ்க்கை நிறைவடையும் என்பதை ஆண்கள் விரும்புகிறார்கள். பெண்களும் இதை முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள்.

 

இதையும் படியுங்கள்

சமையல் குறிப்புக்கள் – கோவா வடை

Pagetamil

திருகோணமலை ஸ்பெஷல் மாமைற் முறுக்கு

Pagetamil

மட்டக்களப்பு மரக்கறி கூட்டுக்கறி

Pagetamil

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!