25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
ஆன்மிகம்

உண்மையில் இறைவனை எப்படி வழிபட வேண்டும்

பலரும் கோயிலுக்கு இறைவனை வணங்க வருகின்றனர். ஆனால் அதில் சிலர் கருவறையில் மூலவரைக் கண்டதும் தன் கண்களை மூடிக்கொண்டு வழிபட ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல், கண்களை மூடிக்கொண்டு நிற்கின்றனர்.உண்மையில் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.கோயிலில் உள்ள மூலவரைக் கண்டதும் ஒரு நொடி கூட வீணாக்காமல் இறைவன் மீது வைத்த கண் எடுக்காமல் பார்த்து தரிசனம் செய்யவும். கோயிலில் உள்ள மூலவரைக் கண்டதும் ஒரு நொடி கூட வீணாக்காமல் இறைவன் மீது வைத்த கண் எடுக்காமல் பார்த்து தரிசனம் செய்யவும். உன்னை மனதார தரிசித்த உள்ளம் குளிர்ந்தேன். நீ என் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைந்திருக்க அருளாசி செய்வாய் என வேண்டிக் கொண்டு உங்கள் இல்லத்திலும் எழுந்தருள வேண்டுங்கள். வீட்டில் தினமும் பூஜை செய்யும் போது, கோயிலில் தரிசனம் செய்த இறைவனை மனதில் திருவுருவத்தை நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.

இறைவனை எப்போது வழிபட வேண்டும்?

எல்லா தினங்களிலும் இறை வழிபாடு செய்யலாம். கோயிலுக்கு செல்லலாம். ஆனால் எல்லா நாட்களிலும் கோயிலுக்குச் சென்று வருவது அனைவராலும் முடியாது அல்லவா. முடிந்தவரைக் கோயில் கோபுரத்தை கை எடுத்து கும்பிடுவது அவசியம். இருப்பினும் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களிலாவது கோயிலுக்கு சென்று வரலாம். அதுமட்டுமல்லாமல் பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, பிரதோஷம், ஏகாதசி, சதுர்த்தி, கிருத்திகை, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், மாத சிவராத்திரி, பிறந்த நாள், திருமண நாள், பண்டிகை போன்ற தினங்களிலும்,சுவாமி தரிசனம் செய்வது மிகவும் நல்லது. அதோடு ஒரு குறிப்பிட்ட இறைவனுக்கு உகந்த நாட்களில் அதற்குரிய கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு வருவது மிகவும் சிறப்பானது.

கோயிலுக்கு எப்படி செல்ல வேண்டும்?

கோயிலுக்கு செல்லும் உங்களால் இயன்ற அளவு பூ, பழம், தேங்காய், அபிஷேகத்திற்குரிய பொருட்கள், தீபத்துக்கு உரிய நெய் முதலான பொருட்களை கொண்டு செல்வது அவசியம். எதுவும் எடுத்துச் செல்ல முடியாத சூழல் இருந்தால், அது குறித்து கவலைப்படாமல் இறைவனை மன நிறைவுடன் வழிபட்டு வாருங்கள். உங்களின் உண்மையான பக்தியால் இறைவனை வணங்கும் போது உங்கள் கண்களிலிருந்து நிச்சயம் நீர் சுரக்கும். அதுவே இறைவனுக்கு மிகவும் பிரியமானது. ஒவ்வொரு கோயிலிலும் எப்படி வழிபட வேண்டுமோ அந்த விதிமுறைக்கேற்ப வழிபட்டு, கோயிலை பிரதட்சணம் செய்து விட்டு வரவும்.

​இறைவனை எப்படி வணங்குவது?

பலரும் கோயிலுக்கு இறைவனை வணங்க வருகின்றனர். ஆனால் அதில் சிலர் கருவறையில் மூலவரைக் கண்டதும் தன் கண்களை மூடிக்கொண்டு வழிபட ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுப்பது கூட தெரியாமல், கண்களை மூடிக்கொண்டு நிற்கின்றனர். உண்மையில் இறைவனை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோயிலில் உள்ள மூலவரைக் கண்டதும் ஒரு நொடி கூட வீணாக்காமல் இறைவன் மீது வைத்த கண் எடுக்காமல் பார்த்து தரிசனம் செய்யவும். இறைவனின் அழகில் மனது மயங்குங்கள். இறைவனின் அலங்காரம், அவரின் ஆடை, அணிகலன்களை ரசியுங்கள். அவர் பக்தர்களுக்கு எப்படி அருள்பாலிக்கக்கூடிய கோலத்தை ரசித்து வியப்படையுங்கள்.

இறைவனை தரிசிக்க முடியாவிட்டால் என்ன செய்வது?

சில நேரங்களில் நாம் இறைவனை தரிசிக்க செல்லும் போது, அபிஷேகம், அலங்காரத்திற்காக திரை போட்டு விடுவார்கள். அல்லது அர்ச்சகர் மூலவரை மறைத்து விடலாம். அதனால் மூலவரை சரியாக தரிசனம் செய்ய முடியாமல் போகலாம். எனவே கோயிலுக்குள் நுழைந்த உடன், இறைவா நான் உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன், உன் தரிசனம் சிறப்பாக கிடைக்க வேண்டும், உன் அருள் வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள். சில விஷேச தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அப்போது நம்மால் இறைவனை தரிசிக்க முடியாமல் கூட போகலாம். அப்போது இறைவா இன்று உன்னை தரிசிக்க முடியாமல் கூட போனாலும், நீ என்னை பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்பது தெரியும். இந்த பக்தன் மீது உன் கடைக்கண் பார்வை என் மீது விழட்டும் என மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

​இறைவனை எப்படி வேண்டுவது ?

உண்மையைச் சொல்லப்போனால் இறைவனிடம் வேண்டுவதற்கு ஒன்றுமில்லை. நம்மைப் படைத்த இறைவனுக்கு நமக்குத் தேவையானது என்ன என்பது தெரியும். அப்படியே சில விஷயங்களை இறைவனிடம் வேண்டியாக வேண்டுமென்றால், கோயிலுக்குள் நுழைந்த உடன், உங்கள் மனபாரத்தை இறைவனை நினைத்து இறக்கி வையுங்கள். கோயில் மூலவரை பார்க்கும் போது அவரை முழுவதுமாக பார்த்து கண் திறந்து ரசியுங்கள். கண் மூடிக் கொண்டு வணங்குவதை விடுத்து, அவரது அழகில் மயங்குங்கள். அதோடு, என்னை நீ தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு என்ன தேவையோ அதை நீ கொடு. எது தேவையில்லையோ அதை நீ நீக்கி விடு என பிரார்த்தனை செய்யலாம்.

“கலியுகத்தின் கடைசி நாளை தீர்மானிக்கும் தூண்… இந்த தூண் விழும்போது உலகம்” அழிந்துவிடுமாம்…

இறைவனை அழைத்தல் :

உன்னை மனதார தரிசித்த உள்ளம் குளிர்ந்தேன். நீ என் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைந்திருக்க அருளாசி செய்வாய் என வேண்டிக் கொண்டு உங்கள் இல்லத்திலும் எழுந்தருள வேண்டுங்கள். அதோடு, வீட்டில் தினமும் பூஜை செய்யும் போது, கோயிலில் தரிசனம் செய்த இறைவனை மனதில் திருவுருவத்தை நினைத்து பிரார்த்தனை செய்வது தான் உண்மையான வழிபாடு ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment