வவுனியாவில் 116 பேருக்கு தொற்று… 2 மரணங்கள்!

Date:

வவுனியாவில் கொரோனாத் தொற்று 116 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில இன்று (21) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கொரோனாத் தொற்று 116 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குருமன்காடு பகுதியைச் சேர்ந்த வந்த பெண் ஒருவரும், மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...

விஜய்யை வாழ்த்தியதால் அநுரவுக்கு வந்த சிக்கல்!

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அனுர...

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்