மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச்சேர்ந்த் 44 வயதுடைய 06 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா ஸ்ரீராஜஜெயம் என்பவரே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நேற்றிவு அல்லது இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
செங்கலடி- பதுளை பிரதான வீதி காயங்குடா பிரதான வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொன்டிருக்கும் போதே வீதியில் நின்ற யானை தாக்கியுள்ளது. மேலும் குறித்த யானை வீதியோரத்தில் இருந்த மரங்களையும் முறித்து சேதப்படுத்தியுள்ளது.
பிரதான வீதியோரத்தின் அருகே உள்ள காணியொன்றினுள் சடலமாக காணப்பட்ட குடும்பஸ்தர் தொடரபான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வந்த மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்கின்றார்.
சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது




