25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இந்தியா

தலிபான்களால் இந்தியாவில் உலர் பழ வர்த்தகம் பாதிப்பு!

தலிபான்கள் ஏற்றுமதியை நிறுத்தியதால் இந்தியாவில் உலர்பழ வர்த்தகம் பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் உலர்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் 55 கோடி டாலர் அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு உலர் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு தேவையான பொருட்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டது.

தற்போது ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தலிபான்கள் இந்தியாவுடனான இறக்குமதி, ஏற்றுமதி உறவை முழுமையாக நிறுத்துகிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து பொருட்கள் இந்தியாவுக்கு வருவது முழுமையாக நின்றுவிட்டது.

இதன் காரணமாக, வாக் எல்லை வழியாக 200 லாரிகளில் இந்தியா வரும் உலர் பழங்கள் வரத்து நின்றுபோனது. இதனால் உலர் பழ இறக்குமதியாளர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று மும்பையை சேர்ந்த உலர்பழ வியாபாரி ராஜிந்தர் ஷா கூறினார்.

தலிபான்கள் காபூலை முற்றுகையிட தொடங்கியதில் இருந்தே உலர் பழங்களின் விலை உயரத் தொடங்கியது. பாதாம் பருப்பு விலை கிலோவுக்கு ரூ .200 வரை அதிகரித்துள்ளது. அத்தி, உலர் திராட்சை, ஆப்ரிகாட் போன்றவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ .250 வரை உயர்ந்துள்ளது ஆனால் தற்போது தட்டுப்பாடு இல்லை.

உலர் பழங்கள் போதிய கையிருப்பு உள்ளது. தட்டுப்பாடு ஏற்படும் என்ற காரணத்தால் விலை உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய உலர்பழ வகைகள் தயாராக உள்ளன. விரைவில் சகஜநிலை திரும்ப வாய்ப்பு உள்ளது.

அதன்பிறகு உலர்பழ வர்த்தகம் சகஜநிலைக்கு திரும்பும் என்று ஆப்கானிஸ்தான் வியாபாரிகள் தெரிவித்ததாக மும்பை வியாபாரி ஒருவர் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

‘பெரியார் என்ன சமூகநீதி செய்தார்… பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது’- சீமான்

Pagetamil

5 ஆண்டுகளில் 64 பேரால் பாலியல் வன்கொடுமை: காதலனின் துரோகம் மாணவியின் வாழ்வை சிதைத்த கொடூரம்

east tamil

சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை: தமிழக சட்டப்பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்

Pagetamil

“நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்” – மாணிக்கம் தாகூர் எம்.பி.

Pagetamil

Leave a Comment