நடிகை சித்திரா காலமானார்!

Date:

நடிகை நல்லெண்ணெய் சித்ரா காலமானார்.

பிரபல நடிகையான நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் நேற்று இரவு 12 மணிக்கு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவருக்கு வயது (56).

சித்ரா இயக்குநர் கே.பாலசந்திரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம் உள்பட 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக சித்ரா நடித்துள்ளார்.

நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்டார்.

நடிகை சித்ரா கடைசியாக ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்ற படத்தில் பள்ளி மாணவனாக நடித்தார். அந்த படம் 2020 ஜனவரி 3ஆம் திகதி வெளியானது.

நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறாள். அவர் இந்தாண்டு பிளஸ் டு முடித்துள்ளார். குழந்தையை வளர்ப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்துள்ளது.

அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவரது மறைவிற்கு நடிகை, நடிகர்கள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை கூறுகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் குற்றச்சாட்டில் 9,000 இற்கும் அதிக சிறார்கள் கைது

கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் தற்போது வரை, போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின்...

கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கத்திக்குத்து!

கிளிநொச்சி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்குள் நேற்றிரவு (10) 8.00...

வாகரை தோணிதாண்டமடு பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எல்லைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்