பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதால் , உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் அசேலாசம்பத், சீனி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்துவது நியாயமானது என்றார்.
பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி உரிமையாளர்களின் முடிவு, அரசாங்கத்தையோ அல்லது பொதுமக்களையோ சிரமப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார்.
அத்தியாவசிய தொழிலாளர்களுக்காக சிறிய அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சம்பத் கூறினார்.
அதன்படி, திங்கள்கிழமை முதல் கடைகளில் விற்கப்படும் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்பு கறி ரூ .150 ஆகவும், ஒரு சாதாரண தேநீர் ரூ .25 ஆகவும் உயர்த்தப்படும் என்றார்.