எண்ணெய் சருமம் என்பது பல ஆண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை. எண்ணெய் சருமம் முகப்பரு, பருக்கள் போன்றவற்றிலிருந்து விடுபட ஆண்கள் அதிகம் அலட்டிகொள்வதில்லை. ஆனால் இது மோசமான சரும பாதிப்பை உண்டாக்கும். தலை பொடுகு, உடல் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யும். குறிப்பாக பராமரிப்பு இல்லாத சருமத்தில் வெகுவாகவே இவை ஒட்டிக்கொள்ளும்.
இலேசான பராமரிப்பு மூலம் சருமத்தை சுத்தம் செய்ய எண்ணெய் மற்றும் பருக்கள் இருந்தால் அவற்றை வெளியேற்றவும் இந்த இயற்கை குறிப்புகள் உதவும். முகத்தில் வடியும் எண்ணெயைக் குறைக்க
தேவையான பொருட்கள்
ரோஸ் வாட்டர் 200 மில்லி
பச்சை கற்பூரப்பொடி – 1 டீஸ்பூன்
இரண்டையும் நன்றாக கலந்து காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 முறை சருமத்தை துடைக்க பயன்படுத்தலாம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் பாக்டீரியாக்களை உருவாக்குவதை குறைக்கிறது. மேலும் சருமத்தொற்று, அரிப்பு மற்றும் சருமத்தை தொந்தரவு செய்வதற்கான வாய்ப்புகளை குறைக்கவும் உதவுகிறது.
ஆண்களுக்கான முகப்பரு பேக்
ஆண்கள் முகப்பருவை கிள்ளுதல், அழுத்துதல் போன்ற எரிச்சலூட்டும் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்களுக்கு இந்த ஃபேஸ் பேக் உதவும்.
புதினா பேஸ்ட் – 2 டீஸ்பூன்
கிராம்பு -2
பன்னீர் – தேவைக்கு
சந்தனப்பொடி – 1 டீஸ்பூன்
கற்பூரம் – சிட்டிகை
அனைத்து பொருள்களையும் மென்மையான பேஸ்ட் பதத்துக்கு கலக்கி விடவும். இதை சருமத்தில் தடவி நன்றாக காய விட்டு பிறகு சுத்தமான நீரில் கழுவி விடவும். தினமும் இதை செய்து வரலாம். பேஸ்ட் எஞ்சியிருந்தால் இதை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து காற்றுபுகாத டப்பாவில் சேர்க்கலாம்.
பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட் ஹெட்ஸ்
இந்த இரண்டையும் கொண்டிருக்கும் ஆண்கள் முதலில் செய்ய வேண்டியது சரும சுத்தம். சருமத்துக்கான எக்ஸ்ஃபோலியேட்டர் ஆண்கள் பெரும்பாலும் கவனிப்பதில்லை. இதனால் கரும்புள்ளிகள் மற்றும் ஒயிட் ஹெட்ஸ் உண்டாகலாம். இது முகப்பரு மற்றும் பருக்களை உண்டாக்குகிறது. மேலும் சுத்தமான மற்றும் தெளிவான சருமத்தை எதிர்கொள்ளும் ஆண்களுக்கு சரும சுத்தம் முக்கியமானது. சருமத்தை சுத்தம் செய்யும் ஸ்க்ரப் வகைகள்
ஆரஞ்சு பொடி – 4 டீஸ்பூன்
எலுமிச்சை தோல் பொடி – 1 டீஸ்பூன்
சீன களிமண் – 50 கிராம்
உலர்ந்த வேப்பிலை தூள் – 5 டீஸ்பூன்
அரிசி மாவு – 5 தேக்கரண்டி
அனைத்து பொருள்களையும் கலக்கி மீண்டும் உலரவிட்டு அதை காற்றுபுகாத டப்பாவில் அடைத்து விடவும். ஸ்க்ராப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் பொடியை புதினா நீரில் கலந்து சருமம் முழுவதும் தடவி எடுக்கவும். இவை உலர்ந்ததும் தண்ணீருடன் ஸ்க்ராப் செய்யவும். இது பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஓயிட் ஹெட்ஸ் இல்லாமல் சருமத்தை சுத்தமாகவும் எண்ணெய் இல்லாமலும் மாற்ற உதவுகிறது.
அடிப்படை தோல் பராமரிப்பு விதிகள் குறித்து அனைத்து ஆண்களும் அறிய வேண்டியது அவசியம். சுத்தமான சருமத்துக்கு அடிப்படை விதிகளை பின்பற்ற வேண்டும். தினமும் 10 முதல் 12 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மது அருந்துவதை குறைக்க வேண்டும். அல்லது அளவாக குடிக்க வேண்டும்.