யாழ் போதனா வைத்தியசாலைக்கு இரத்ததானம் வழங்கிய இராணுவம்!

Date:

கொரோணா காலத்தில் ஏற்படும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ் மாவட்ட இராணுவத்தினரால் குருதி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது.

யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கொடிதுவக்கு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குருதி வழங்கும் இந்நிகழ்வில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு குருதியை வழங்கினர்.

குறித்த குருதியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ்.சிறிபவானந்தராஜா முன்னெடுத்துள்ளார்.

குருதி வழங்கும் நிகழ்வில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி, வைத்திய அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட மேலதி வரி குறித்து விளக்கம்!

வாகன இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 50% மேலதிக வரி (Surcharge) குறித்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்