‘ஆயிரத்தில் ஒருவன்’ பட்ஜெட் இவ்வளவுதானா : வெளிவந்த உண்மை

Date:

12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது. தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. திரைப்படம் வெளியான போது விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வணிக ரீதியாக பெரிய அளவில் போகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக, ஆயிரத்தில் ஒருவன் பட பட்ஜெட் குறித்த ரகசியத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இறுதியில் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஏதாவது: “ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ .18 கோடி தான், ஆனால் இதை ஒரு மெகா பட்ஜெட் படமாக மிகைப்படுத்தி காட்டுவதற்கு ரூ .32 கோடி பட்ஜெட் படமாக அறிவிக்க முடிவு செய்தோம்.என்ன ஒரு முட்டாள்தனம். உண்மையான பட்ஜெட் தொகையை படம் வசூலித்திருந்தாலும் அது சராசரியான வசூல் என்றே கருதப்பட்டது. இதன்மூலம், என்ன முரண்பாடாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக்கொண்டேன் ”. இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார்

spot_imgspot_img

More like this
Related

உயர் நடுத்தர வருமான நாடாக இலங்கை: தடுப்பூசிகளுக்கான சலுகைகள் இழப்பு!

உலக வங்கியின் புதிய வருமான வகைப்பாட்டின் கீழ் இலங்கை உயர் நடுத்தர...

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்