பெண்களின் மனதில் இடம்பிடிக்க ஆண்கள் என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகள்!
எந்த ஒரு நல்ல உறவும் சில அடிப்படை குணங்களின் அமைப்பிலேயே வலுவாக கட்டமைக்கப்படுகிறது. தோற்றம், பாலியல் வேதியியல் என மேலோட்டமான விஷயங்கள் ஆரம்ப அறிகுறிகளாக இருந்தாலும் இன்னும் சில குறிப்பிடத்தக்க குணாதிசயங்கள் உள்ள ஆண்களை வாழ்நாள் முழுக்க பெண்கள் விரும்புகிறார்கள். அப்படி பெண்கள் ஆண்களிடம் விரும்பும் எட்டு விதமான குணாதிசியங்களை பற்றி நாம் பார்க்கலாம்.
- தன்னம்பிக்கை மிக்கவராக இருக்க வேண்டும்
ஆணின் செயல்பாட்டிலிருந்து பெண்ணை கவர்ந்திழுக்கும் அம்சங்களில் நம்பிக்கை உள்ளது. ஆண்கள் தன்னம்பிக்கையுள்ளவர்களாக இருந்தால் நேர்மையான உற்சாசகத்தை பெண்கள் மிகவும் விரும்புவார்கள். உண்மையில் ஆண் பொது இடத்தில் அல்லது முக்கியமான நேரங்களில் தன்னை எல்லோர் முன்னிலும் உயர்த்தி கொள்ளவோ போட்டியிடவோ சிறுமைப்படுத்திகொள்ளவோ இல்லாமல் இருந்தாலே பெண்ணின் கவனத்தை ஈர்த்துவிடுவார்கள்.
- நேர்மையும் நம்பிக்கையும்
ஆண் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கும் போது அந்த குணம் பெண்ணுக்கு மிகவும் கவர்ச்சியாக விரும்பத்தக்கதாக மாறும். அவர் நம்பகமான ஆணாகவெ பார்க்கப்படுவார். குறிப்பாக உண்மையாகவும் இதயத்திலிருந்தும் பேசுபவராகவும் இருந்தால் அவர் அப்பெண்ணின் நம்பிக்கைக்குரியவராவார். காரணமாக நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் உறவுகளை ஆழப்படுத்தியது. ஒரு உறவு நீண்ட காலம் நீடிக்கும் என்றால் அவளை நம்புவது போல் அவளும் தன் துணையை நம்பலாம்.
- தனி மனித ஒழுக்கம்
நல்லொழுக்கம் என்பது வலுவான தார்மீக தன்மையை கொண்டிருப்பது. ஒரு பெண் ஒழுக்கமுள்ள ஆணையே விரும்புகிறார்கள். உறவுகளின் அடிப்படையில் ஆணின் ஒழுக்கம் என்பது பெண்ணுடனான இணைப்பை வலுப்படுத்தப்படும். ஆணின் ஒழுக்கம் பெண்ணை கவரும் போது அந்த உறவில் நீண்ட வலுவான அந்நியோன்யமான உறவு நீடிக்கிறது.
- இரக்க உணர்வு
ஆண் இரக்கமும் அனுதாபமும் கொண்ட ஒரு மனிதன் பெண்களை ஈர்ப்பதில் ஒரு படி மேலே இருக்கிறான். இரக்கமான மனிதனால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். மேலும் இவர்களால் பெண்ணை அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். ஆழமான நம்பிக்கை கொள்கிறார்கள். இத்தகைய ஆணின் மீது பெண்கள் ஈடுபாடு கொள்வது மகிழ்ச்சியான உறவை மேலும் பலப்படுத்தும்.
- உணர்ச்சி
உணர்ச்சி ரீதியாக நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆணை பெண்கள் விரும்புகிறார்கள். உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்துவது விசித்திரமானதாக இருந்தாலும் இது உறவை நீடித்து வளர்க்கும் வழிமுறையாகும். எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் மறுமுகத்தையும் காண்பிக்கும் ஆணின் குணநலன்களை பெண்கள் விரும்புகிறார்கள். பின்னால் மனதில் அனைத்தையும் அடைத்து வைத்திருப்பதை காட்டிலும் விவாதிக்காத ஆணை காட்டிலும் வெளிப்படையாக உணர்ச்சியை பெறும் ஆண்கள் பெண்களின் மனதில் சட்டென்று இடம்பிடித்துவிடுகிறார்கள்.
- மரியாதை
ஆரோக்கியமான மகிழ்ச்சி மற்றும் வெற்றிகரமான உறவை பெறுவதற்கு இருவருமே ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். அடிக்கடி உனக்கென்ன என்று அலட்சியம் செய்யும் ஆண்களை காட்டிலும் உன்னுடைய கருத்து என்ன என்று மரியாதை செய்யும் ஆண்கள் வாழ்வில் மிக முக்கியமாக விடுகிறார்கள். பெண்ணை மோசமாக நடத்தும் போது அவளது இதயத்தில் அவனது மதிப்பெண் குறைந்துவிடுகிறது. இந்த உறவு நீர் மேல் இலை போன்று ஒட்டாமல் இருக்கும். பெண்ணின் விருப்பத்தை மதித்து நடந்துகொள்ளும் ஆண் பெண்ணுக்கு எப்போதும் பிடித்தவனாகிறான்.
- நகைச்சுவை உணர்வு
பெண்ணின் கவனத்தை ஈர்க்க ஆண் நகைச்சுவை நடிகனாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் நகைச்சுவை உணர்வுடன் இருந்தால் போதும். இரண்டு பேரும் ஒரே மாதிரி விஷயத்தை அணுகும் போது இருவரும் ஒரே விஷயத்தை பார்த்து சிரிக்கும் போது பரஸ்பரம் இருவரின் கருத்தையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள்.
இது இருவரது மனதிலும் நெருக்கத்தை கொண்டுள்ளது. நகைச்சுவையாக பேசி சிரிக்க வைக்கும் ஆண் பெண்ணையும் சிரிக்க வைக்கும் போது காதல் உறவு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று உறவு குறித்த ஆய்வு கூறுகிறது. இதனால் அப்பெண் எப்போதும் நேர்மறையான உணர்வுடன் இருப்பாள் என்றே சொல்லலாம்.