சுண்ட வத்தல் சாதப்பொடி தயாரிக்கும் முறை

Date:

சுண்ட வத்தல் சாதப்பொடியை சாதம், நெய்யுடன் சேர்த்து சாப்பிடும் போது அருமையாக இருக்கும். இன்று இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
சுண்ட வத்தல் – 50 கிராம் மணத்தக்காளி வத்தல் – 25 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் – 5
மிளகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு பிடி
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிது ஏற்கனவே வத்தலில் உப்பு சுவை இருப்பதால் குறைத்து சேர்க்கவும்.

செய்முறை:

வாணலியை சூடு படுத்தி இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வத்தல் வகையை ஒன்றொன்றாக போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக்கொள்ளவும்.
பிறகு, அதே எண்ணெயில் மிளகாய் மிளகு, சீரகம் போட்டு வறுக்கவும்.
இறுதியாக கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தை போட்டு வறுத்தெடுக்கவும். ஆறியதும் மிக்சியில் சேர்த்து மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான சாதத்தோடு நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரப் பகிர்வை வலுப்படுத்த புதிய திட்டம்: டக்ளஸ் தேவானந்தா முன்வைப்பு

மாகாண சபைகளின் முதலமைச்சர்களுக்கு நாடாளுமன்றிலும் அமைச்சரவையிலும் இடமளிக்கப்பட வேண்டும் -  டக்ளஸ்...

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்