25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
விளையாட்டு

இந்திய வீரர்களை சீண்டியது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பாதிப்பு!

இந்திய வீரர்களை சீண்டியது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது: ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் 

 விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் 5 டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் முடிந்துள்ளன.

 நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னணியில் உள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 25-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் தோல்வி நிலையை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அதில் இருந்து மீண்டு ரன்களை குவித்து, சிறப்பான பந்து வீச்சின் மூலமும் வெற்றியைப் பெற்றது.

 இந்த நிலையில் 2-வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றி தகுதியானது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவின் 2-வது இன்னிங்சில் தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் பின்கள வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்திய வீரர்களை உசுப்பேற்றியதால் அவர்கள் அடிபட்ட புலிபோல் விளையாடினார்கள். சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார்கள். இந்த வெற்றிக்கு இந்தியா தகுதியானது.

 இந்த 5 நாள் ஆட்டமும் பார்ப்பதற்கு சிறப்பாக இருந்தது. ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமே. இந்திய வீரர்களை அவர்கள் சீண்டியது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

 இங்கிலாந்து அணியின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பேட்டிங் வரிசையில் கண்டிப்பாக மாற்றம் செய்ய வேண்டும். இங்கிலாந்து அணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இனி வரும் டெஸ்ட் போட்டி களில் மாற்றம் மிகவும் அவசியம் ஆகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

Leave a Comment