26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
சினிமா

அவன் இவன் பட வழக்கு முடிவுக்கு வந்தது!

‘அவன் இவன்’ பட வழக்கில் இருந்து இயக்குனர் பாலா விடுவிப்பு!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா நடிப்பில் ‘அவன் இவன்’ திரைப்படம் வெளியானது. கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியீட்டு படத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றிய, சிங்கம்பட்டி ஜமீன்தார் பற்றிய அவதூறாக சித்தரிக்கப்பட்டதாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ஏற்கனவே நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆஜராகி உள்ளார்.

கடந்த மார்ச் மாதம் நடிகர் ஆர்யா தரப்பில் படத்தில் இடம்பெற்ற காட்சிகளுக்கு வருத்தம் தெரிவித்ததால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், இயக்குனர் பாலா ஆஜராகியும் வழக்கு விசாரணை தொடர்ந்து அம்பை கோர்ட்டில் நடந்தது.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குற்றத்தை முறையாக நிரூபணம் செய்யாததால், இயக்குனர் பாலா வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment