25.1 C
Jaffna
January 29, 2025
Pagetamil
இலங்கை

வவுனியாவில் ஒரு கிராமம் முடக்கம்!

வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து குறித்த கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

கல்மடு கிராமத்தில் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக வவுனியா வடக்கு சுகாதார பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று எழுமாறாக அன்டியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதிலே கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த கிராமம் பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், பொலிசார் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் புளியங்குளம் கல்மடு பகுதியில் 35 குடும்பங்கள் உள்ளனர். அதில்19 குடும்பங்களில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட அன்டியன் பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கிராமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 10 நாட்களின் பின்னர் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே குறித்த கிராமம் முடக்க நிலையில் இருந்து விடுபடும் என சுகாதார பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் சிக்குன்குனியா பாதிப்பு!

Pagetamil

இந்திய மீனவர்களென்றதும் ஓடிச்சென்று பார்த்த ஜேவிபிக்காரர்கள்!

Pagetamil

அனுரவுக்கு யாழில் வலுக்கும் எதிர்ப்பு

Pagetamil

வைத்தியசாலை பெண் ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு, சம்பவ நேரம் இயங்காதிருந்த கண்காணிப்புக் கமரா

Pagetamil

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

Leave a Comment