ஹொட்டலில் ரகளையில் ஈடுபட்ட 66 வயது காதலிக்கும், 28 வயது காதலனிற்கும் பிணை!

Date:

ஹொட்டலொன்றில் ரகளையில் ஈடுபட்ட 66 வயதான கோடீஸ்வர பெண்ணையும், 28 வயதான காதலனையும் எச்சரிக்கை செய்து, பிணையில் விடுவித்துள்ளது நீர்கொழும்பு நீதிமன்றம்.

66 வயதான கோடீஸ்வர பெண் தொழிலதிபரும், 28 வயதான காதலனும் கொச்சிக்கடை பகுதியிலுள்ள ஹொட்டல் ஒன்றிற்கு இரவு உணவருந்த சென்றனர். உணவு ஓர்டர் செய்து நீண்டநேரமாகியதாக குறிப்பிட்டு, உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.

இதன்போது ஹொட்டலிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, ஹொட்டல் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டது.

இதன்படி பெண் தொழிலதிபரும், காதலனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு தலா ரூ. 200,000 பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த ஜோடி நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டனர். வழக்கு டிசம்பர் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

66 வயதான கோடீஸ்வர பெண் திருமணத்திற்கு புறம்பான சட்டவிரோத உறவையே 28 வயதான இளைஞனுடன் பேணி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்