வெற்றிப் பட இயக்குனருடன் இணைவாரா நம்ம தளபதி

Date:

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய்.

நடிகர் விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடக்கிறது.

இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் எனப்படும்.

தொடர்ந்து, இயக்குனர் தேசிங்கு பெரியசாமி அண்மையில் நடிகர் விஜய்யை சந்தித்து கதை ஒன்றை சொன்னாராம், அது விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. இதனால் விஜய்யின் 67-வது படத்தை அவர் இயக்க அதிக வாய்ப்புள்ளது. இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கடந்தாண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...

பசிலுக்கு அடிவயிற்றில் புளியை கரைத்த பல்கலைக்கழக மாணவர் சங்கம்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சங்கம் (INTA), சில காலமாக பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது...

மட்டு சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்ற சிறைக்கைதி ஒருவர் இன்று வியாழக்கிழமை (14)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்