27.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil
விளையாட்டு

T20 World cup 2021: வாய்ப்பைத் தவறவிடும் டாப் 3 நட்சத்திர வீரர்கள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் 2007ஆம் ஆண்டு முதல் முதலில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முதல் தொடரிலேயே, மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி அதிரடியாகச் செயல்பட்டு, கோப்பையைத் தட்டித் தூக்கி சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி, கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.

இதுவரை மொத்தம் 6 டி20 உலகக் கோப்பை சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அதிகபட்சமாக மேற்கிந்தியத் தீவுகள் அணி (2012, 2016) இரண்டுமுறை கோப்பை வென்றுள்ளது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) அணிகள் தலா ஒருமுறை கோப்பை வென்றிருக்கிறது. இந்நிலையில், 7ஆவது டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. 2007 முதல் 2016வரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்ற சில நட்சத்திர வீரர்கள், இம்முறை 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை இருக்கிறது. அவர்களில் டாப் 3 நட்சத்திர வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ராஸ் டெய்லர்:
2006ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான ராஸ் டெய்லர், இதுவரை நடைபெற்ற 6 உலகக் கோப்பை தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருக்கிறார். தான் அணியில் இணைந்த பிறகு, ஒரு உலகக் கோப்பையைக் கூட அணிக்கு பெற்று தரமுடியவில்லையே…என பலமுறை வருத்தத்தை வெளிப்படுத்திய அவர், 2021ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி, நியூசிலாந்து அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதுவரை 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லரின் பெயர், நியூசிலாந்து டி20 உலகக் கோப்பைக்கான அணி வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஷேன் வாட்சன்:
2020ஆம் ஆண்டுவரை ஐபிஎலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஷேன் வாட்சன், 2016ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு அறிவித்துவிட்டார். அதன்பிறகு, ஐபிஎல் 13ஆவது சீசன் முடிந்த பிறகு அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துவிட்டார். இவர் இதுவரை நடைபெற்ற அனைத்து டி20 உலகக் கோப்பையிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேந்திரசிங் டோனி:
2007ஆம் ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய மகேந்திரசிங் தோனி, இறுதியில் கோப்பை பெற்றுக்கொடுத்தார். அடுத்து நடைபெற்ற அனைத்து டி20 உலக் கோப்பைகளிலும் பங்கேற்ற அவர், 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி திடீரென்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்து, அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!