வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியேற அனுமதி: புதிய சுகாதார வழிகாட்டல்!

Date:

கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் புதிய வழிகாட்டல்கள் ​வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்களின்படி, பல விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று (18) அமுலாகும் தடை, எதிர்வரும் 31 ஆம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும்.

அதன்பிரகாரம் உடற்பயிற்சிக் கூடங்கள், உடற்கட்டமைப்பு நிலையங்கள், மசாஜ் சென்டர்கள், சிறுவர் பூங்காக்கள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், கடற் கரையோரங்களில் ஒன்றுகூடுதல், நீச்சல் தடாகங்களை பயன்படுத்தல் ஆகியவற்றுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலை மற்றும் மருத்துவ சேவை பெறுபவர்கள் தவிர வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர்.

ரயில் மற்றும் பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அளவான பயணிகள் ஏற்றப்படுவதுடன், மாகாண எல்லைகளுக்குள் பயணத்தில் ஈடுபடவேண்டும்.

 

 

 

spot_imgspot_img

More like this
Related

சதொசவில் 18 அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகள் குறைப்பு

மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றங்கள் காரணமாக உலகச் சந்தைகளில் விலை உயர்வு...

மோசடி யுவதி கைது!

அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நாமம் ஒன்றை போலியாகப் பயன்படுத்தி, இணையதளம் மூலம் அதிக...

மரமுந்திரி தோட்டத்தில் ஒருவர் சுட்டுக்கொலை

வாயுத் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 08 சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்