ருசியான கேரட் முட்டை பொரியல்

Date:

கேரட் முட்டை பொரியல்

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. உடல் அழகைப் பராமரிக்கவும் கேரட் உதவுகிறது. தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் முகம் பளபளப்பாகும்.

தேவையானப் பொருள்கள்:

கேரட் – 1

சின்ன வெங்காயம் – 5

பச்சை மிளகாய் – 1

மஞ்சள் தூள் – சிறிது

முட்டை – 2

உப்பு – தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

உளுந்து

சீரகம்

கடலை பருப்பு

கறிவேப்பிலை

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கேரட்டை துருவி கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றின் பின் ஒன்றாகத் தளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பிறகு கேரட், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

கேரட் வதங்கியதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறிவிடவும்.

இரண்டும் நன்றாக வெந்து பூப்போல் உதிரியாக வந்ததும் இறக்கவும்.

இப்போது சுவையான கேரட் – முட்டை பொரியல் ரெடி.

இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்