27.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil
விளையாட்டு

டி20 உலகக் கோப்பை குறித்து தினேஷ் கார்த்திக் பளிச்!

டி20 உலகக் கோப்பை 7ஆவது சீசனுக்கான அட்டவணையை நேற்று ஐசிசி வெளியிட்டது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ரிசர்வ் டே உண்டு எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

விராட் கோலி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, ஒரு ஐசிசி கோப்பை கூட வென்றுகொடுக்கவில்லை. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியா அரையிறுதிவரை முன்னேறித் தோற்றது. அடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, இறுதிப் போட்டிவரை சென்று தொற்றது. இதனால், கேலி மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அடுத்து, டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. இதிலும் கோலி கோப்பை வென்றுகொடுக்கவில்லை என்றால், அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனால், கோப்பை வெல்ல கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரமாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், “இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது எனது கணிப்பு. கோப்பை வெல்வதில் இந்தியாவுக்கு அடுத்தபடி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மே.இ.தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல், கெய்ரன் பொல்லார்ட் போன்ற பல அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களுடன் நிகோலஸ் பூரன், சிம்ரோன் ஹெட்மையர் போன்ற சில இளம் அதிரடி வீரர்களும் இருப்பதால், அதாவது அனுபவம் + இளமை கலந்து வலுவான அணியாக இருப்பதால், அந்த அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற அதிக வாய்ப்பிருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!