மொஹமட் ராசிக் மொஹமட் தஸ்லினுக்கு இலங்கை பொலிஸாரினால் ரூபா 2.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் குழுவினரால் மாவனல்லையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது பற்றிய தகவலை அவரே பொலிசாருக்கு வழங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மீது சஹ்ரான் குழு கொலை முயற்சியில் ஈடுபட்டது.
உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது குணமடைந்துள்ளார். எனினும், அவரால் நடமாட முடியாத நிலையேற்பட்டது.
தகவல் கொடுத்ததற்காக பயங்கரவாதிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட தஸ்லிம் இப்போது முடக்கப்பட்டுள்ளார்.
தகவல் அளித்ததற்காக இந்த பணம் தஸ்லீனுக்கு வழங்கப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர காசோலையை வழங்கினார்.
்ரான்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1