26.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil
விளையாட்டு

இங்கிலாந்து அணியை பங்கம் செய்த கவாஸ்கர்

இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளை கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதல் போட்டி மழை காரணமாக டிரா ஆனதால், இரண்டாவது டெஸ்ட் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 364/10 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 129 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 391 ரன்கள் எடுத்து 27 ரன்கள் முன்னிலை பெற்றது. ரூட் 180 ரன்கள் குவித்து அசத்தினார்.
அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணி 298/8 ரன்கள் சேர்த்து 271 முன்னிலையுடன் டிக்ளேர் அறிவித்தது. 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி இரண்டு செஷன்களின்போது களமிறங்கிய இங்கிலாந்து அணி 120/10 மட்டும் சேர்த்து, ஆட்டத்தை டிரா செய்ய முடியாமல் 151 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். “இங்கிலாந்து அணியின் ஓபனர்களில் டெக்னிக் மிகவும் வேடிக்கையாக இருந்தது. அடுத்து ஒன்-டவுன் பேட்ஸ்மேன் ஹசீப் ஹமிது அவுட்டாகிவிடுவோமோ என்ற பதற்றத்திலேயே இருந்தார். இதனால், அனைவரின் கவனமும்
ஜோ ரூட் பக்கம் திரும்பியது. ஜானி பேர்ஸ்டோ ஆட்டத்தின் சூழல் நன்றாக இருந்தால் ரன்களை குவிக்கிறார். இல்லையென்றால் ஆட்டமிழந்து விடுகிறார். பட்லர் ஒயிட் பால் கிரிக்கெட்டில் அதிரடி காட்டுகிறார். ஆனால், டெஸ்டில் அவர் சிறப்பாக சோபிக்க முடியுமா? எனத் தெரிவில்லை” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கவாஸ்கர், “பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பாகச் செயல்படுகிறார். ராபின்சன் அவ்வப்போது நல்லமுறையில் பந்துவீசுகிறார். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டும் என்றால் இங்கிலாந்து அணியில் ரூட், ஆண்டர்டன், ராபின்சன் ஆகிய இரண்டரை வீரர்கள் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார்கள். இதனால், மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணிதான் வெற்றிபெறும் எனக் கருதுகிறேன்” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்

ஓய்வு குறித்து விராட் கோலி சூசகம்!

Pagetamil

ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் விரைவில்

Pagetamil

இலங்கையின் முதல் டெஸ்ட்… 1996 உலகக் கோப்பை கப்டனின் உதயம்

Pagetamil

புரட்டியெடுக்கும் அவுஸ்திரேலியா: காலியில் கதிகலங்கி நிற்கும் இலங்கை!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சம்பியன்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!