மோசமான கையெழுத்தால் பிசுபிசுத்த வங்கிக் கொள்ளை!

Date:

பிரிட்டனில் ஓய்வூதியம் பெறும் ஒருவரின் வங்கிக் கொள்ளை முயற்சி, மோசமான கையெழுத்தால் தோல்வியில் முடிந்துள்ளது.

சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த ஆலன் சிலேட்டரி என்பவர் 2 வாரங்களில், 3 வங்கிகளைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

3 வங்கிகளிலும் கையால் எழுதப்பட்ட குறிப்பை வங்கி ஊழியர்களிடம் கொடுத்து, பணத்தைத் தன்னிடம் கொடுக்குமாறு அவர் கேட்டிருக்கிறார்.

மார்ச் 18ஆம் திகதி, 67 வயது சிலேட்டரி, முதல்முறை வங்கியில் கொள்ளையடிக்க முயன்றார்.

ஆனால், வங்கி ஊழியரால், கையால் எழுதப்பட்ட குறிப்பில் இருந்ததைச் சரியாகப் படிக்க முடியாததால், சிலேட்டரி வெறுங்கையுடன் திரும்பினார்.

மார்ச் 26ஆம் திகதி, வேறொரு வங்கியில் அது போன்ற குறிப்பைக் கொடுத்து அவர் 4,500 வெள்ளியைக் கொள்ளையடித்தார்.

ஏப்ரல் 1ஆம் திகதி, 3வது வங்கியிலும் அதே போல் முயற்சி செய்துள்ளார் சிலேட்டரி.

ஆனால், வங்கி ஊழியர் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால், வேறு வழியின்றி அவர் திரும்பிவிட்டார்.

கொள்ளை முடிந்து பொதுப் பேருந்தில் வீடு திரும்பிய அவரை, அவருடைய பேருந்துப் பருவச் சீட்டின் மூலம் காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

அவருக்கு 6 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார்சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில்...

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்