27 C
Jaffna
January 2, 2025
Pagetamil
குற்றம்

கோயிலிற்குள் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகரிற்கு விளக்கமறியல்!

கோயிலுக்குள் வைத்து 15 வயதான சிறுமியை இரண்டு முறை துஷ்பிரயோகம் செய்த அர்ச்சகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி, போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து கோவிலிற்குள் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

ஆலய அர்ச்சகர் இராமச்சந்திரன் ஜெயராமன், மந்திர தந்திர வேலைகளிலும் உள்ளூரில் பிரபலமாக இருந்தார். 15 வயதான மகள் காதலிக்க ஆரம்பித்ததால் கவலையடைந்த தாயார், அவரது காதல் உறவை மந்திர, தந்திரங்கள் மூலம் பிரிப்பதற்காக ஆலயத்திற்கு அழைத்து சென்றிருந்தார்.

சிறுமியை ஆலயத்திற்குள் அழைத்து சென்ற அர்ச்சகர், துஷ்பிரயோகம் செய்திருந்தார். அன்று அவர் காற்சட்டை அணிந்திருந்தார். மறுநாள் சட்டை அணிந்து வருமாறு அர்ச்சகர் கூறினார். மறுநாள் சிறுமி சட்டை அணிந்து சென்றார். இரண்டாவது நாளும் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்.

மறுநாளும் வருமாறு கூறியுள்ளார். எனினும், மறுநாள் ஆலயத்திற்கு செல்ல சிறுமி மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதன்பின், தனது மகளின் கல்விக்கு இடையூறாக இருப்பதாக மகளின் காதலனான 16 வயது சிறுவன் மீது, தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

விடயம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, அர்ச்சகர் ஆலயத்தை பூட்டி விட்டு தலைமறைவானார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, நேற்று முன்தினம் (16) நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இதேவேளை, இந்த சம்பவத்தை சாக்காக வைத்து, இந்துக்கள் இல்லாத இடத்தில் எதற்கு இந்துக் கோயில், அதை உடனே அகற்றுங்கள் என பௌத்த பிக்கு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

கசிப்பு குடிக்க ரூ.300 தராத மனைவியை அடித்துக் கொன்ற முரட்டுக் கணவன்

Pagetamil

பெண்ணுடன் எக்குத்தப்பாக நடந்த பொலிஸ்காரர் கைது!

Pagetamil

யாழ்ப்பாணத்தில் மலைவிழுங்கி மனேஜர் கைது!

Pagetamil

சிறுவர் இல்லத்தில் சீரழிக்கப்பட்ட 9 வயது சிறுமி!

Pagetamil

15 வயது காதலியை ஏமாற்றி சீரழித்த காதலன் கைது!

Pagetamil

Leave a Comment