ஒரே இரவில் ஆப்கான் பெண்களின் மாற்றம்: இணையத்தில் வைரலான புகைப்படம்!

Date:

காபூலில் இருந்து செய்தி வெளியிடும் போது ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் ஆடை மாற்றம் தலிபான் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக உலகளவில் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சிஎன்என் தலைமை செய்தியாளர் கிளாரிசா வார்ட் காபூலில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, “அவர் ஒரு பெண் என்பதால்” ஒதுங்கியிருக்குமாறு தலிபான்களால் குறிப்பிடப்பட்டதாக தெரிவித்தார்.

தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, திங்களன்று ஆப்கானிஸ்தானின் தலைநகரில் கமராவுடன் பேசியபோது கிளாரிசா வார்ட், கருப்பு உடை அணிந்து ஹிஜாப் அணிந்திருந்தார்.

24 மணி நேரத்திற்கு முன்பு அவள் வண்ண உடையில் காணப்பட்டார். ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து, அவரது தோற்றமும் மாறியது.

2016 முதல் சிஎன்என்இல் பணிபுரியும் 41 வயதான அவர், தலிபான்கள் தெருக்களில் ஒழுங்கை பராமரிப்பதாகக் கூறினார்.

“அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிடுகிறார்கள், ஆனால் அவர்கள் அதே நேரத்தில் நட்பாகத் தோன்றுகிறார்கள்,” என்று அவர் விளக்கினார்.

எனினும், அந்த பெண் பத்திரிகையாளர் அதற்கு ஒரு விளக்கம் அளித்துள்ளார். ஒரேநாள் மாற்ற மீம் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.

வர்ணஉடையணிந்து எடுத்த புகைப்படம் தனியார் வளாகமொன்றில் எடுக்கப்பட்டதாகவும், காபூலின்  தெருவில் எப்போதும் தலையை மூடியே சென்றதாகவும், ஆனால் இப்போது போல முழுமையாக தலைமுடி முழுவதுமாக மூடப்பட்டிருக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்