26.7 C
Jaffna
March 11, 2025
Pagetamil
இலங்கை

களை நெல்லை கட்டுப்படுத்த தவறின் மாவட்டத்தில் பாரிய நெல் உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் அபாயம்: கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்!

களை நெல்லை (பன்றி நெல் ) விவசாயிகள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்த தவறின்
மாவட்டத்தில் பாரிய நெல் உற்பத்தி வீழ்ச்சி ஏற்படும் அபாயம்! கிளிநொச்சி
மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்செய்கையில் களை நெல் எனப்படும்
விவசாயிகள் குறிப்பிடும் பன்றி நெல்லின் தாக்கம் அதிகரித்து வருவதால்
விவசாயிகள் குறித்த நெல் களையை கட்டுப்படுத்த தவறின் எதிர்காலத்தில்
மாவட்டத்தில் நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக
கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொன்னையா
அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார் .

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெற்ச்செய்கை பாரிய குளங்கள், மானாவாரி செய்கை அடங்கலாக 71024 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .காலபோக செய்கையில் குறித்த களை நெல்லின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் முரசுமோட்டை, உருத்திரபுரம், கணேசபுரம், பூநகரி போன்ற பகுதிகளில் அதிகளவு பரவி வருகிறது.

குறித்த களையினை ஆரம்பத்திலே விவசாயிகள் கட்டுப்படுத்த வயலில் நீர் உள்ள போதும், விதைப்பதற்கு முன்பு விதைகளை சுத்திகரித்து, நீர்ப்பாசன வாய்க்கால்களை
சுத்தம் செய்து நெல்லை விதைப்பதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும் ஆரம்பத்திலே குறித்த களையை விவசாயிகள் இனம் கண்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்டு சிவப்பு நீறமாகவும் நெல்லை விட வேகமாக வளரக்கூடியது. இனி வரும் காலங்களில் களைநாசினி பயன்பாடு இல்லாது போனால் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே விவசாயிகள் ஒன்றிணைந்து ஆரம்பத்திலே கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களை தாக்கிய ஆசிரியர்

Pagetamil

மதுபோதையில் மயங்கியிருந்த சாரதியும், நடத்துனரும் பணி இடைநீக்கம்!

Pagetamil

யாழில் யூடியூப்பர் கைது

Pagetamil

தேசபந்து கைது செய்யப்படாமலிருப்பதன் பின்னணியில் அநுர அரசின் டீல்!

Pagetamil

சண்டித்தனத்தில் ஈடுபட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் கைது!

Pagetamil

Leave a Comment