திருமண வரவேற்பு மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் அனைத்து திருமணங்களையும் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவுவலை தடுக்கும் முயற்சியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருமண விழாக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படாது என்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் கலந்து கொண்டு திருமணப் பதிவுகள் நடைபெறலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.
அதன்படி, மணமகன், மணமகன், அவர்களின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சிகள் பதிவுத் திருமணத்தில் கலந்து கொள்ள முடியும்.