கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் காணிக்கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் பாலசுந்திரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.
காணிக்கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்தே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறித்த நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என்றும் ஏனைய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத் திறப்பது குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1