அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று (16) இடம்பெற்றது.
இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றனர்.
இதன்போது முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக பதவியேற்றார்.
ஜிஎல் பீரிஸ் புதிய வெளிவிவகார அமைச்சராகவும், தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெரும பதவியேற்றார், காமினி லொக்குகே மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் துறைக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1