பேரரசரின் முடிவுக்கு ஏற்ப இடைக்கால பிரதமராக தமக்கு வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பினை முறைப்படி ஆற்றப் போவதாக டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.
நிர்வாக செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்வதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரையில் பேரரசருக்கு ஆலோசனை வழங்கும் குறிப்பிட்ட வரம்புக்கு உட்பட்ட பணிகளையே தாம் கவனித்துக் கொள்ளப் போவதாக அவர் தெரிவித்தார்.
துணையாக அமைச்சரவையின் உதவி இல்லாத பட்சத்தில், தேசிய சட்டத் துறையின் ஆலோசனைக்கு உட்பட்டே இடைக்கால பிரதமராக தமது பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தமது அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு கோடி மதிப்பிலான காசோலையை தம்மால் கையெழுத்திட முடியாது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.




