நியூ சவுத் வேல்ஸில் எகிறுகிறது தொற்று!

Date:

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 478 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கவலையளிப்பதாக, மாநில முதலமைச்சர் கிலாடிஸ் பெரெஜிக்லியன் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் 61 பேர், நோய் தொற்றியிருந்தபோது சமூகத்தில் நடமாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

டெல்ட்டா வகைக் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த, அகன்ற சிட்னி (Greater Sydney) வட்டாரத்தில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதிசெய்ய மாநிலக் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Operation Stay Home என்றழைக்கப்படும் நடவடிக்கையில் விதிமுறைகளை மீறுவோருக்கு ஐயாயிரம் டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.

சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக, இதுவரை 500 பேர் பிடிபட்டனர்.

அவர்களில் 120 பேருக்கு, முகக்கவசம் அணியாததற்காக தண்டனை விதிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்