நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இந்த வாரம் ஒரு நாள் மட்டுமே பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.
இன்று காலை நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன்படி நாளை காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடுகிறது.
கடந்த சில நாட்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பாதுகாப்பில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் கோவிட் -19 தொற்றுக்குள்ளானதை அடுத்து இந்த வார பாராளுமன்ற கூட்டங்களை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1