கடந்த ஆண்டு தனது பத்து ஆண்டுகால நண்பரான கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். அதோடு திருமணத்திற்கு பிறகும் நடிப்புக்கு எந்த தடையுமில்லை என்று அறிவித்தவர் தொடர்ந்து நடித்தும் வருகிறார். தமிழில் இந்தியன் -2, ஹேய் சினாமிகா, கோஷ்டி, கருங்காப்பியம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா மற்றும நாகார்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடித்து வருபவர், ஹிந்தியில் உமா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வாரங்கல்லில் ஒரு ஷோரூம் திறப்பு விழாவிற்கு வந்த காஜல் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திருமணத்திற்கு பிறகும் தன்னை சினிமா உலகம் ஆதரித்து வருவதை பெருமையாக சொல்லிக் கொண்டவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக இருந்தார்.
அதோடு, தெலுங்கில் மேலும் இரண்டு மெகா பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதுகுறித்த தகவலை விரைவில் வெளியிடுவேன் என்று கூறியுள்ள காஜல், இப்படி நான் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வருவதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவினால் தான் அதிகமான படங்களில் என்னால் கமிட்டாக முடிகிறது. தொடர்ந்து அவரது ஆதரவின் மூலம் சினிமாவில் இன்னும் பெரிய அளவில் சாதிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.