25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
விளையாட்டு

சுதந்திர தினத்தில் உடல் ஆரோக்கியம் பற்றிக் கூறிய சச்சின்!

இந்தியாவை அதிக இளைஞர்கள் கொண்ட நாடு என பெருமையாக சொல்கிறோம். ஆனால், உடற்தகுதியில் சிறந்த நாடு என்று சொல்வதில்லை. இதற்கு விளையாட்டு கலாசாரம் இல்லாததே முக்கிய காரணம். ஒன்றை இழந்த பிறகு, அதன் முக்கியத்துவத்தை உணர்கிறோம். உதாரணமாக உடல் ஆரோக்கியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். பின் உடல் பாதிப்படையும் போது அவதிப்படுகிறோம். உடலை சுறுசுறுப்பாக வைப்பதில் விளையாட்டுக்கு பங்கு உண்டு. ஒருவரின் தலைமை பண்பு, நடத்தை என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுகிறது.

குழந்தைக்கு பின் பள்ளிகள் திறக்கும் போது உடற்கல்வி வகுப்புகள் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த நேரத்தை மற்ற பாடல்களுக்கு செலவிட முயற்சிப்பர். நாம் விளையாட்டை ‘சீரியசாக’ எடுத்து கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒருநாள் என்றில்லாமல் தினம் தோறும் உடற்கல்வி வகுப்புகள் இருக்க வேண்டும். நாளின் துவக்கத்தில் உடற்கல்வி இருந்தால், அன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் உற்சாகமாக இருப்பவர். மற்ற பாடல்களை கவனத்துடன் படிப்பர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்கள், ஏதாவது ஒரு விளையாட்டை நம் குழந்தைகள் தேர்வு செய்ய ஊக்கமாக அமையும். வாழ்க்கைக்கு தேவை விளையாட்டு அல்லது படிப்பா என்ற கேள்வி எழுகிறது. விளையாட்டை தேர்வு செய்யும் அனைவரும் விளையாட்டு வீரர்களாக முடியாது. ஆனால், உடல் ஆரோக்கியமான இன்ஜினியர், டாக்டர், வக்கீலாக உருவாக முடியும்.

ஆடாமல், அசையாமல் அலைபேசியில் அதிக நேரம் செலவிடும் நாம், உடல் அளவில் அசைவில்லாமல் இருக்கக் கூடாது. குழுந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை போல, அனைவருக்கும் விளையாட சுதந்திரம் கிடைக்க வேண்டும்.

விளையாட்டை நேசிக்கும் தேசமாக இந்தியா உள்ளது. இதை அதிகம் பேர் விளையாட்டில் பங்கேற்க தேசமாக மாற்றுவோம் என இன்றைய 75 வது சுதந்திர நாளில் உறுதி ஏற்போம் என்றார்  சச்சின்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் மொரட்டுவ, ஜே’புர அணிகள் சம்பியன்!

Pagetamil

அவுஸ்திரேலியா 445 ஓட்டங்கள்: திண்டாடும் இந்தியா!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

Leave a Comment