சுவையான முட்டைக் குழம்பு தயார்

Date:

பொதுவாக முட்டை குழம்பு என்றால், மசாலா அரைத்து கொதிக்க வைத்து அதில் வேக வைத்த முட்டையை வைத்து கொதிக்க வைத்து இறங்குவார்கள். ஆனால் இன்று நாம் செய்யப்போகும் குழம்பு சற்று வித்தியாசமானது.

 தேவையான பொருட்கள்:

 நாட்டுக்கோழி முட்டை – 6

 பெரிய வெங்காயம் – 2

 தக்காளி – 3

 பச்சை மிளகாய் – 2

 மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

 மல்லித்தூள் – 3 ஸ்பூன்

 மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

 எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

 உப்பு – தேவையான அளவு

 கறிவேப்பிலை – சிறிதளவு

 கடுகு – தாளிக்க

 அரைக்க

 தேங்காய் – அரை மூடி

 பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்

 செய்முறை

 முதலில், தேங்காயைத் துருவி பொட்டுக்கடலையுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

 வாய் அகலமான பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு வெங்காயம். ப.மிளகாயை போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்குங்கள்.

 அதன் பின் தக்காளியும் சிறிது உப்பும் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கி மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள்.

 மசாலா பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கரைசலை ஊற்றி சிறிது நீர் சேர்த்து உப்பை சரிபாருங்கள்.

 குழம்பு பச்சை வாசனை போனவுடன் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து, அவை மோதிக்கொள்ளாமல் இடைவெளி விட்டு குழம்பில் ஊற்றுங்கள். ஐந்து நிமிட முட்டைகள் வெந்து மேலே வரும்போது அடுப்பை அனைத்துவிட்டால் முட்டைகுழம்பு தயார்.

spot_imgspot_img

More like this
Related

ஈரானிடம் இன்றும் 21,22 சதவீத ஏவுகணை இருக்கலாம்: ட்ரம்ப்

ஈரானிடம் இன்னும் “21, 22 சதவிகித” ஏவுகணைகள் எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...

பாடகரை விடுவிக்கக்கோரி போராட்டம்

சொல்லிசை பாடகர் சங்கீதன் 02.06.2026 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது...

விலாசம் கேட்பது போல நடித்து வில்லங்கம்: சிறுமி கடத்தப்பட்டு சீரழிப்பு; புடவைக்கடைக்காரர்கள் கைவரிசை!

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்