இந்தியாவில் ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டியை நடத்த ஐ.சி.சி.- பி.சி.சி.ஐ. ஆகியவை முடிவு செய்தன. அதன்படி அக்டோபர் மாதம் 17-ந்தேதியில் இருந்து நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இதில் ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களுடன் கலந்து கொள்ள ஐ.சி.சி. அனுமதித்துள்ளது. மேலும், பயிற்சியாளர்களுடன் 8 ஸ்டாஃப்கள் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் கூடுதல் வீரர்களுக்கு ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படுவதால் முன்னெச்சரிக்கை காரணமாக கூடுதல் வீரர்களை அழைத்துச் செல்லவும் ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது. ஆனால், கூடுதல் வீரர்களுக்கான செலவுகளை அந்தந்த அணிகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.