யாழ்ப்பாணம் திருநெல்வேலி பால்பண்ணை பகுதியில் புதிய கட்டடம் ஒன்றில் மின்னிணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (13) அதிகாலை இடம்பெற்றது.
குருநகர் பகுதியை சேர்ந்த கோபு விஜித் (17) என்பவரே உயிரிழந்தவராவார்.
தனியார் கட்டட ஒப்பந்த காரர் ஒருவரின் கீழ் அந்த சிறுவன் வேலையில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் நடந்தது.
புதிய கட்டடத்தில் மின் இணைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாகவும், 17 வயதான சிறுவனை ஆபத்தான வேலைகளில் அமர்த்தியமை தொடர்பாகவும் பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1