தொற்று துவங்கியதில் இருந்து தற்போது வரை, தொற்றில் இருந்து தப்பிக்க மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தும் சிறந்த வழி மாஸ்க் அணிவது மட்டும் தான் என்று வலியுறுத்துகிறது. அதே நேரத்தில், மாஸ்க் அணிவோர் ஒரே மாஸ்கை துவைக்காமல் பயன்படுத்தி வரும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இதனால் அவர்களுக்கு ஏற்படும் சருமப் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ள வாங்க.
கோவிட் 19 எனப்படும் தொற்று பரவத் தொடங்கிய நாட்களில் இருந்து முகக்கவசம் எனப்படும் மாஸ்க் அணிவது ஒரு உயிர் காக்கும் கருவியாக இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி பல நாடுகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவதோடு சமூக விலகலை மேற்கொள்வது, கைகளை அடிக்கடி கழுவிக் கொள்வது அல்லது சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
துவைக்காத மாஸ்க்
தற்போது இந்தியாவில் டெல்டா வகை வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இதைத் தவிர்க்க மாஸ்க் அணிவது ஒரே வழி. அப்படி அணியும் மாஸ்க்கை ஒருசிலர் சுத்தமாக துவைக்காமல் அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பல தோல்ப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும், முகத்தில் ஏற்படும் தோல் ஒவ்வாமை மற்றும் தோல் அரிப்பு போன்ற எரிச்சலுக்கு ஆளாக்கும்.
மாஸ்க்னே – மாஸ்க் அணிவதால் வரும் பரு
பொதுவான தோல் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த மாஸ்க்னே. இது தோல் சிவந்து போதல் மற்றும் தோல் எரிச்சலுக்கு வெளியாகும். மேலும், முகக் கவசம் அணிவதால் அந்த குறிப்பிட்ட பகுதியில் சருமம் அதிக வியர்வையை வெளிப்படுத்துகிறது. அவை, சரும துளைகளை அடைத்து முகப்பருவுக்கு அனுமதிக்கப்படுகிறது.
சுத்தமற்ற மாஸ்க் கருப்பு பூஞ்சை தொற்றை ஏற்படுத்துமா?
சுகாதாரமற்ற துவைக்காத முகக் கவசங்கள் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றுக்கு பங்களிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இது உண்மையா என்று அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு ஆய்வும் சொல்லவில்லை.
எந்த மாஸ்கை பயன்படுத்த?
நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி விட்டு பிறகு அதை தூக்கி எரியக்கூடிய சர்ஜிக்கல் மாஸ்கை தேர்வு செய்யவும். அதேபோல் உங்களுடைய சருமம் சென்சிட்டிவான சருமமாக இருந்தால், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பருத்தியால் ஆன மாஸ்கை பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், நீங்கள் ஒரு முறை பயன்படுத்திய மாஸ்கை துவைக்காமல் மீண்டும், மீண்டும் அணியக் கூடாது. அதை நன்கு துவைத்து சுடுநீரில் அலசி, வெயிலில் காய வைத்து பின் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது.