25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
மருத்துவம்

மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள்

மார்பகங்கள் என்பது ஏதோ பாலியல் இச்சையை தூண்டும் ஒரு பொருளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது தெரியுமா? சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது ஈஸ்ட்ரோஜனும் மற்ற ஹார்மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது. தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது.

பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர். பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனப்படுகிறது.

மார்பக பிரச்சினைகள்

சிஸ்ட்கள் மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள். பைரோடினோமா இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.
காலக்டோரியா அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி. கைனகோமேஸ்டியா ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது. மஸ்டிடிஸ் பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது. மாஸ்டால்ஜியா மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது. மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி. மார்பக புற்றுநோய் பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.

மார்பகம் பற்றி வெளியில் பேசவோ, சொல்லவோ தயங்கி எத்தனையோ பேர் தங்களுடைய உயிரையே பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் பெண்கள் இதைப் பற்றி வெளியில் சொல்ல வெக்கப்பட்டுக் கொண்டு புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உங்கள் மார்பகம் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுருங்கினால் உங்கள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை கண்டறியலாம்.உங்கள் உடலில் கொழுப்புச் சத்தும் மிகவும் குறைந்துவிட்டது என்பதை உணரலாம். மாதவிடாய் ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் மார்பக அளவுகளில் வேறுபாடு தெரியும். அவை உடலில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றத்தால் நிகழ்கிறது. இவற்றைத் தாண்டி மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் மார்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment