பீதியூட்டும் தென்மராட்சி நிலவரம்: இன்றும் பலருக்கு தொற்று!

Date:

தென்மராட்சி – சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (14) 68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையின் போது 18 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், சாவகச்சேரி தனியார் நிறுவன ஊழியர், கொடிகாமம் மீன் சந்தை வியாபாரி, வெளிமாவட்டங்களில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்கள், இலங்கை போக்குவரத்துச் சாலை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 18 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட கொடிகாமம், சாவகச்சேரி, வரணி, எழுதுமட்டுவாழ்,பகுதிகளில் கொரோனா அபாய நிலை அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சுகாதாரத் தரப்பினர் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கொரோனாத் தொற்று மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதுடன், அத்தியாவசியமான பயணங்களின் போது சுகாதார வழிபாட்டல் அறிவுறுத்தல்களை மிகவும் இறுக்கமாக பேணுமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின்...

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்