ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் ஏற்கனவே தியேட்டர்களில் வெளியான உடனேயே திருட்டு இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதை தடுக்க தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் பயன் இல்லை. காரணமாக காரணமாக தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களையும் எடுத்து திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடுகிறார்கள்.
ஓ.டி.டி.யில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை ஏற்கனவே திருட்டு இணையதளத்தில் வெளியிட்டனர். தற்போது நயன்தாரா பார்வையற்றவராக நடித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியான நெற்றிக்கண் படத்தையும் ஹெச்.டி. தரத்தில் திருட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியாகி உள்ளனர்.