பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.
நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது. வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.