27.6 C
Jaffna
August 19, 2022
முக்கியச் செய்திகள்

சுமந்திரனை கட்டுப்படுத்துங்கள்; அல்லது பதவி விலகுங்கள்: மாவையை வலியுறுத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சுமந்திரன் யாருடனும் பேசுவதை, மாவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் மாவை ராஜினாமா செய்யவேண்டும் என வவுனியாவில் கடந்த 1640 வது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

செஞ்சோலை சிறுவர் இல்லம் அழிக்கப்பட்டு 54சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்ட 15வது ஆண்டு நினைவுதினம் காணாமல் போனவர்களின் உறவினர்களால் வவுனியாவில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறுதெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

எதிர்காலத்தில் இந்த படுகொலைகளை எப்படி நிறுத்துவது என்பதுதான் இன்று நமது முக்கிய செய்தி. எங்கள் அரசியல் தலைவர்கள் சிங்களவர் தட்டில் வைக்கும் சலுகைகளுக்காக வேலை செய்வதை விட் டு, தமிழர்களை சரியாக வழிநடத்த வேண்டும்.

செப்டம்பரில் ஜெனீவா கூட்டத்தை முன்னிட்டு, சுமந்திரன் இலங்கையில் சிங்கள புத்திஜீவிகளை சந்திக்க தனியாக செல்கிறார் என்று கேட்பது மிகவும் அபாயமானது. கட்சி அனுமதி இல்லாமல் அவரால் தனியாக செயல்பட முடியாது. இங்கே எதையும் மறைக்க ராஜதந்திரம் தேவை இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த 74 வருட அனுபவத்தில் சிங்களத்துடன் பேசுவது பயனற்றது என்பது வரலாறு .

தென்சூடான், கொசோவோ, பொஸ்னியா, கிழக்கு திமோர் மற்றும் முன்னர் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை மட்டுமே பயனுள்ளதாக உலகத்துக்கு காட்டின. மாவை அவரது முந்தைய கட்சித் தலைவர் தந்தை செல்வா போல் நடந்து கொள்ள வேண்டும். அவரால் முடியாவிட்டால், அவர் தலைமையை ராஜினாமா செய்து கட்சியை கட்டுப்படுத்தக்கூடிய ஒருவருக்கு கொடுக்க வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் நாங்கள், சுமந்திரனை நம்பவில்லை. 2017 பெப்ரவரி 09 இல், பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்த்தன எங்களை அழைத்தார். சுமந்திரன் எங்கள் சந்திப்புக்கு வந்து பாதுகாப்பு அமைச்சருடனான எங்கள் சந்திப்பை குழப்பிவிட்டார். இதுவே சுமந்திரனின் இயல்பாகும். சுமந்திரன் தமிழர்களை விரும்பாத நபர். தமிழர்களிடையே வாழ்வது தனக்கு அவமானம் என்று சொன்னவர்.

சுமந்திரன் தமிழர் தாயகத்தில் சிங்களவர் வாழ வேண்டும் என்று விரும்புபவர். அதை நிரூபிக்க அவர் நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட காலத்தில் வவுனியா, நெடுங்கேணியில் சிங்கள குடும்பத்திற்கு 4000 காணி உறுதிப்பத்திரங்களை மைத்திரியுடன் சேர்ந்து வழங்கினார்.

சுமந்திரன் என்பவர் வட கிழக்கு இணைப்பை விரும்பாதவர் மற்றும் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை முஸ்லீம் (7 அங்கத்தினர்) வழங்கினார், அங்கு அப்போது தமிழர்கள் (13 அங்கத்தினர்) பெரும்பான்மையாக இருந்தனர். சுமந்திரன் மற்ற மதங்களை விரும்பியதில்லை, பாராளுமன்றத்தில் புத்ததிற்கு முதலிடம் கொடுத்தார். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என்று சொன்னவர், இப்போது தமிழர்களுக்கு உள்நாட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் என்றார். முள்ளிவாய்க்காலில் இறந்த தமிழர்களை அவர் எவ்வளவு வெறுக்கிறார் என்பதை இது காட்டுகிறது.

ரணிலின் நல்லாட்சியின் போது சுமந்திரன் எங்களிடம் கூறியதை நாம் நினைவூட்ட விரும்புகிறோம். நல்லாட்சி முடிவில் புதிய அரசியலமைப்பு வருகிறதோ இல்லையோ தான் அரசியலிலிருந்து விலகுவேன் என்கிறார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் 75% பூர்த்தி செய்துள்ளதாகவும் கூறினார். அவர் நம்பக்கூடிய நபர் அல்ல என்பதை இது காட்டுகிறது.

தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சுமந்திரன் யாருடனும் பேசுவதை, மாவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாது அனுமதித்தால். நாங்கள் மாவையை இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

வடக்கு பிரதம செயலாளராக சிங்களவர் நியமனம்: நாளை ஒன்றுகூடி எதிர்க்கிறார்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள்!

Pagetamil

21வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற கட்சித் தலைவர்கள் ஒப்புதல்

Pagetamil

ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட்ட மக்கள்: கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் (VIDEO)

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!