குறுகிய நேரத்தில் பாம்பே சாண்ட்விச் செய்யும் முறை இதோ!

Date:

பாம்பே சாண்ட்விச் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு இந்த சாண்ட்விச் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பாம்பே சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பிரெட் ஸ்லைஸ் – 8,
உப்பு சேர்த்த வெண்ணெய் தேவைக்கேற்ப,
பீட்ரூட் – ஒன்று,
உருளைக்கிழங்கு – ஒன்று,
தக்காளி – ஒன்று,
வெங்காயம் – ஒன்று,
வெள்ளரிக்காய் – ஒன்று,
சாட் மசாலாத்தூள் – சிறிதளவு,
டொமேட்டோ கெட்சப், கிரீன் சட்னி – தேவையான அளவு.

செய்முறை:

4 பச்சை மிளகாய், இஞ்சி ஒரு இன்ச் துண்டு (தோல் சீவவும்), புதினா, கொத்தமல்லித்தழை தலா ஒரு கைப்பிடி அளவு, தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்தால் கிரீன் சட்னி தயார்.

உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். பீட்ரூட்டையும் இரண்டாக நறுக்கி குக்கரில் நான்கு விசில் வரும் வரை வேகவைக்கவும். பிறகு இரண்டையும் தோலுரித்து ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும். வெள்ளரிக்காய், தக்காளியை ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தைத் தோலுரித்து சிறிய வட்டங்களாக நறுக்கவும். ஒரு பிரெட் ஸ்லைஸில் வெண்ணெய் தடவவும். மற்றொரு பிரெட் ஸ்லைஸில் கிரீன் சட்னி தடவவும். கிரீன் சட்னி தடவிய பிரெட் ஸ்லைஸை ஒரு தட்டில் வைத்து கிரீன் சட்னியின் மேல் 2 உருளைக்கிழங்கு துண்டுகள், 2 பீட்ரூட் துண்டுகள் வைக்கவும்.
இதன் மேல் சில தக்காளி, வெங்காயம், வெள்ளரித் துண்டுகளை வைக்கவும். காய்கறிகளின் மேல் சிறிதளவு டொமேட்டோ கெட்சப் தெளித்து, சாட் மசாலாத்தூள் தூவி, வெண்ணெய் தடவிய பிரெட் ஸ்லைசால் மூடவும். மற்ற பிரெட் ஸ்லைஸ்களிலும் இதேபோல் சாண்ட்விச் செய்துகொள்ளவும். ஒவ்வொரு சாண்ட்விச்சையும் நான்கு துண்டுகளாக நறுக்கிப் பரிமாறவும்.
சூப்பரான பாம்பே சாண்ட்விச் ரெடி.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்