வலிமை, மாநாடு அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு.
வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்திற்கும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வலிமை படத்தின் முதல் சிங்கிளான ‘நான் வேற மாறி …’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
அதுபோல் மாநாடு படத்தில் முதல் சிங்கிளான ‘மெஹர்சிலா …’ என்ற பாடல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. தொடர்ந்து, வலிமை மற்றும் மாநாடு படத்தின் இரண்டாவது பாடலை யுவன் சங்கர் ராஜா ரெடி செய்து விட்டதாகவும், விரைவில் இந்த பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார்.