மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்து இன்று நள்ளிரவு முதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இரண்டு வாரங்களிற்கு இது நடைமுறையில் இருக்கும்.
செப்ரெம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி அட்டைகள் இன்றி பொதுமக்கள் பொது இடங்களிற்குள் நுழைவது முழுமையாக தடைசெய்யப்படும்.
சுகாதார நடைமுறைகள் மிக இறுக்கமாக்கப்படும் என்றார்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம், துறைமுகங்கள், விவசாயம், ஆடைத்தொழிற்சாலை மற்றும் விமான நிலையங்கள்களிற்கு செல்பவர்கள் உட்பட அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பொது மற்றும் தனியார் துறைகளில் ஊழியர் சேவைக்கு அழைக்கும் போது மாகாணங்களுக்கு வெளியே வசிக்கும் தேவையான ஊழியர்களை வரவழைக்க நிறுவன தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளது.