26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
சினிமா

தோனிக்காக விக்னேஷ் சிவன் செய்த காரியத்தை பாருங்கோ!

தல மீது இம்புட்டு பாசமாய்யா !!: விக்னேஷ் சிவன் செய்த காரியத்தை பார்த்தீங்களா?

 விஜய்யின் பீஸ்ட் படப்பிடிப்பு நடந்து வரும் கோகுலம் ஸ்டுடியோஸில் விளம்பர பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர் தோனி வந்தார். அப்பொழுது தோனியும், விஜய்யும் சந்தித்து பேசினார்கள்.

 தோனியை அவர் கேரவன் வரை சென்று விட்டு வந்துள்ளார் விஜய். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து தோனி மற்றும் விஜய்யுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை நெல்சன் திலீப்குமார் ட்விட்டரில் வெளியிட்டார்.

 அதை பார்த்த இயக்குநர் விக்னேஷ் சிவனோ, ஒரு வார்த்தை … சொல்ல முடியும் … !!!

 வயித்தெரிச்சல் 274 டிகிரி செல்சியசாக உள்ளது.

 சில ரா ஃபால்களை அனுப்புங்க நெல்சன் திலீப்குமார் … போட்டோஷாப்பாவது செய்து கொள்கிறேன் என்றார்.

 தொடர்ந்து நெல்சன் திலீப்குமாரின் முகத்தில் தன் முகத்தை வைத்து போட்டோஷாப் செய்துவிட்டார் விக்னேஷ் சிவன். அந்த போட்டோஷாப் புகைப்படத்தை பார்த்து நெல்சனும், விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷும் கண் கலங்குவது போன்று மீம்ஸ் போட்டு அதை தன் இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

 அதை பார்த்த ரசிகர்களோ, விக்னேஷ் சிவனிடம் பிடித்ததே இந்த குணம் தான். தன்னை தானே கலாய்த்துக் கொள்கிறார். தல மீது இம்புட்டு பாசமாய்யா உங்களுக்கு. போட்டோஷாப் செய்து திருப்தி அடைந்திருக்கிறீர்கள் என்று கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment