தோனி பிரதமர் … விஜய் முதல்வர் – ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு
நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடக்கிறது. அதே பகுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் நேற்று நடந்தது.
அப்போது விஜய்யும் – தோனியும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தேசிய அளவில் டிரெண்டாகின.
தொடர்ந்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஆளப்போகும் மன்னர்கள் என்ற பெயரில் தோனியை பிரதமராகவும், விஜய்யை முதல்வராகவும் குறிப்பிட்ட போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் – தோனி சந்திப்பை அரசியலாக்கும் விதமாக அமைந்துள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1