பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிகுறியில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. முந்தைய நாள் பாதிப்பு 38,353 ஆக இருந்த நிலையில், தற்போது புதிய பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் 490 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 4,29,669 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 39,069 பேர் பாதிப்பில் இருந்து மீண்டு டிஸ்கார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,60,050 ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் 97.45 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,87,987 நபர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை பெறப்படுகிறது. நாடு முழுவதும் பொதுமக்களுக்கு இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 52,36,71,019 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 44,19,627 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.